உங்கள் கணினியில் git இல்லை என்றால், [install செய்யவும்](https://help.github.com/articles/set-up-git/).
## இந்த repository ஐ fork செய்தல்
இந்த பக்கத்தின் மேலே உள்ள fork பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் செயட்படுத்தலாம்.
இது உங்கள் account இல் ஒரு copy ஐ உருவாக்கும்.
## இந்த repository ஐ clone செய்தல்
இப்போது உங்கள் கணினியில் fork செய்யப்பட்ட repository ஐ clone செய்யவும். உங்கள் GitHub கணக்கிற்குச் சென்று, forked செய்யப்பட்ட repository ஐ open செய்து clone பொத்தானைக் கிளிக் செய்து copy to clipboard கிளிக் செய்வதன் மூலம் நிறைவேற்றலாம்.
*terminal* அல்லது *command prompt* ஐ open செய்து பின்வரும் git கட்டளையை இயக்கவும்:
```
git clone "நீங்கள் copy செய்த url"
```
உதாரணத்திற்கு:
```
git clone https://github.com/இது நீங்கள்/first-contributions.git
```
இங்கு `இது நீங்கள்` என்பது GitHub username என்பதாகும். இதன் மூலம் நீங்கள் first-contributions repository இன் பிரதி ஒன்றை உங்கள் GitHub கணக்கில் செயட்படுத்துகிறீர்கள்.
## கிளையொன்றை உருவாக்குதல்
repository directory க்கு செல்லவும் (நீங்கள் ஏற்கனவே அங்கு இல்லையென்றால்):
```
cd first-contributions
```
இப்போது `git checkout` கட்டளையைப் பயன்படுத்தி ஒரு கிளையை உருவாக்கவும்:
```
git checkout -b <உங்கள்-கிளையின்-பெயர்>
```
உதாரணத்திற்கு:
```
git checkout -b உங்கள்-கிளையின்-பெயர்
```
(கிளையின் பெயருக்கு அதில் *add* சேர்க்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் இது ஒரு நியாயமான விஷயம், ஏனெனில் இந்த கிளையின் நோக்கம் உங்கள் பெயரை ஒரு பட்டியலில் சேர்ப்பதுதான்.)
## தேவையான மாற்றங்களைச் செய்து அந்த மாற்றங்களை commit செய்யுங்கள்
இப்போது *text editor* அல்லது *notepad* இல் `Contributors.md` கோப்பைத் திறந்து, அதில் உங்கள் பெயரைச் சேர்க்கவும். கோப்பின் தொடக்கத்திலோ அல்லது முடிவிலோ இதைச் சேர்க்க வேண்டாம். இடையில் எங்கும் வைக்கவும். இப்போது, கோப்பை சேமிக்கவும்.
நீங்கள் project directory சென்று `git status` இயக்கினால், மாற்றங்கள் இருப்பதை நீங்கள் காண்பீர்கள்.
`git add` கட்டளையைப் பயன்படுத்தி நீங்கள் உருவாக்கிய கிளையில் அந்த மாற்றங்களைச் சேர்க்கவும்:
```
git add Contributors.md
```
இப்போது `git commit` கட்டளையைப் பயன்படுத்தி அந்த மாற்றங்களைச் செய்யுங்கள்:
```
git commit -m "Add <உங்கள்_பெயர்> to Contributors list"
```
`உங்கள்_பெயர்` என்ற இடத்தில் உங்கள் பெயரை கொடுங்கள்.
## மாற்றங்களை GitHub இட்கு push செய்தல்
`git push` கட்டளையைப் பயன்படுத்தி உங்கள் மாற்றங்களைத் தள்ளுங்கள்:
```
git push origin <உங்கள்-கிளையின்-பெயர்>
```
`<உங்கள்-கிளையின்-பெயர்>` ஐ நீங்கள் முன்பு உருவாக்கிய கிளையின் பெயருடன் மாற்றுங்கள்.
remote: Support for password authentication was removed on August 13, 2021. Please use a personal access token instead. remote: Please see https://github.blog/2020-12-15-token-authentication-requirements-for-git-operations/ for more information. fatal: Authentication failed for 'https://github.com/உங்கள் account இல் ஒரு SSH key உருவாக்குதல் மற்றும் கட்டமைத்தல் பற்றிய [GitHub இன் பயிற்சிக்கு](https://docs.github.com/en/authentication/connecting-to-github-with-ssh/adding-a-new-ssh-key-to-your-github-account) செல்லவும்./first-contributions.git/'
இப்போது இழுக்கும் கோரிக்கையை சமர்ப்பிக்கவும்.
விரைவில் உங்கள் எல்லா மாற்றங்களையும் இந்த திட்டத்தின் முதன்மை கிளையில் இணைக்கப்படும். மாற்றங்கள் ஒன்றிணைக்கப்பட்டவுடன் உங்களுக்கு அறிவிப்பு மின்னஞ்சல் கிடைக்கும்.
## இங்கிருந்து எங்கு செல்வது?
வாழ்த்துக்கள்! நீங்கள் ஒரு பங்களிப்பாளராக அடிக்கடி சந்திக்கும் _fork -> clone -> edit -> PR_ பணிப்பாய்வு முடித்துவிட்டீர்கள்.
உங்கள் பங்களிப்பைக் கொண்டாடுங்கள் மற்றும் உங்கள் நண்பர்கள் மற்றும் பின்தொடர்பவர்களுடன் [web app](https://firstcontributions.github.io/#social-share) சென்று பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு மேலும் பயிற்சி தேவைப்பட்டால், [code contributions](https://github.com/roshanjossey/code-contributions) என்னும் செயலை சரிபார்க்கலாம்.
இப்போது மற்ற திட்டங்களுக்கு பங்களிப்பதன் மூலம் தொடங்குவோம். நீங்கள் தொடங்கக்கூடிய எளிதான சிக்கல்களுடன் திட்டங்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். பாருங்கள் [the list of projects in the web app](https://firstcontributions.github.io/#project-list).
### [கூடுதல் வளங்கள்](../additional-material/git_workflow_scenarios/additional-material.md)
## பிற கருவிகளைப் பயன்படுத்தி பயிற்சிகள்
|